விளையாட்டு

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை: பாகிஸ்தான் வீரரை முந்தினார்!

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை: பாகிஸ்தான் வீரரை முந்தினார்!

JustinDurai

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்றதன் மூலம் அதிக டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனை பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் டி20 அரங்கில் ஒரு வீரராக ரோகித் சர்மா உலக சாதனை ஒன்றை நிகழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ரோகித் சர்மா கடந்த போட்டி வரை 124 போட்டிகளில் விளையாடி 3,308 ரன்கள் குவித்து இருந்தார். அதோடு சர்வதேச டி20 அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி இருந்த பாகிஸ்தான் அணியின் வீரர் சோயப் மாலிக்குடன் 124 போட்டிகளுடன் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக சமநிலையில் இருந்தார்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்த மூன்றாவது டி20 போட்டியில் பங்கேற்றதன் மூலம் அதிக டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனை பட்டியலில் தற்போது ரோகித் சர்மா 125 போட்டிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடத்தில் சோயப் மாலிக் 124 போட்டிகளும், முகமது ஹபீஸ் 119 போட்டிகளும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 115 போட்டிகளுடன் நான்காவது இடத்திலும், பங்களாதேஷ் அணியின் வீரரான மகமதுல்லா 113 போட்டிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் விராட் கோலி 97 போட்டிகளுடன் 14-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் ரோகித் சர்மாவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி: எத்தனை ஆண்டுகள் கழித்து தெரியுமா?