விளையாட்டு

200-வது ஒருநாள் போட்டி - சாதனை படைத்த இந்திய வீராங்கனை

200-வது ஒருநாள் போட்டி - சாதனை படைத்த இந்திய வீராங்கனை

JustinDurai

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி, தன்னுடைய 200ஆவது ஒருநாள் போட்டியில் இன்று விளையாடி வருகிறார்.

பெண்கள் உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை, இந்தியா எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்தது. இதனைத்தொடர்ந்து  278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆடிவருகிறது.

இந்த போட்டி இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமிக்கு 200ஆவது ஒருநாள் போட்டி ஆகும். இதன்மூலம் கேப்டன் மிதாலி ராஜ்க்கு அடுத்தபடியாக 200 ஒருநாள் போட்டிகளை எட்டிய இரண்டாவது மகளிர் அணி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் 39 வயதான ஜுலன் கோஸ்வாமி.

நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது,  ஜூலன் கோஸ்வாமி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படிக்க: ஐபிஎல் 2022: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஸ்ட்ரைக் - ரொட்டேஷன்' விதி என்ன சொல்கிறது?