விளையாட்டு

கோப்பையை வெல்லுமா இந்தியா? சவாலான இலக்குதான்!

webteam

முத்தரப்பு டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் பேட்டிங்கை நிறைவு செய்தது பங்களாதேஷ்.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா-பங்களாதேஷ் இடையே இந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இதனால் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்தியாவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்கள் தமிம் 15 மற்றும் லிடான் தாஸ் 11 ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த சபீர் ரஹ்மான் பொறுப்புடன் விளையாடி 50 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்தவர்களில் முகமதுல்லா 21 மற்றும் மெஹிதி ஹாசன் 19 ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சஹால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜெயதேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.