ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பைக்கு எதிரான 4வது போட்டியில் தோல்வியடைந்தது. நேற்று நடைபெற்ற 5வது போட்டியில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் முடிந்துவிட்டாலே அடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது ஹர்பஜன் மற்றும் இம்ரான் தாஹிரின் ட்வீட்டுக்காகவே. வெற்றியோ தோல்வியோ, நறுக்கென படத்தின் பஞ்ச் டயலாக்கை எடுத்து ட்வீட்டாக போட்டு ரசிகர்களை குஷிபடுத்துவார்கள்.
இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்து ட்வீட் செய்துள்ள இம்ரான் தாஹிர், '' ஒரு தடவ தான்டா தவறும், எடுடா வண்டிய, போடுடா விசில '' என பஞ்ச் டயலாக்கை பதிவிட்டுள்ளார். பராசக்தி எக்ஸ்பிரஸின் பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
முன்னதாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கேவின் வெற்றி குறித்து தமிழில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், “நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல. உன்ன மட்டும் தான். நான் என்ன நம்புனேன். அத தாண்டி என் நண்பன் தோனி என்ன நம்புறாங்க? அதுக்கு கைமாறா வெற்றி. ஓரம் கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும். சந்தோஷத்துல அழுகுறேன் நன்றி” என பதிவிட்டுள்ளார்.