விளையாட்டு

“இனிதான் இம்ரான் தாஹிர் ஆட்டம் இருக்கு”- சிஎஸ்கே சிஇஓ

“இனிதான் இம்ரான் தாஹிர் ஆட்டம் இருக்கு”- சிஎஸ்கே சிஇஓ

EllusamyKarthik

கடந்த ஐபிஎல் சீசனில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்தவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர்.

துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனில் ஒரே ஒரு ஆட்டத்தில்கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். 

நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஒவ்வொரு அணியிலும் இடம்பெற வேண்டுமென்ற விதி தாஹிர் விளையாடாமல் இருப்பதற்கு முதல் காரணமாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் இம்ரான் தாஹிர் கூடிய விரைவில் விளையாடுவார் என தெரிவித்துள்ளார். 

“நிச்சயமாக தாஹிர் இந்த சீசனில் விளையாடுவார். இப்போது அணியின் சேர்க்கையில் வெளிநாட்டை சேர்ந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் மற்றும் இரன்டு பவுலர்கள் விளையாடி வருகின்றனர். அடுத்து வரும் ஆட்டங்களில் அமீரக மைதானத்தின் கண்டீஷன் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அப்போது தாஹிர் விளையாடுவார்” என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

“ஆடாமல் வெளியில் உட்கார்ந்திருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இருப்பினும் ஒரு அணியாக நாங்கள் இருப்பது எனக்கு மன நிறைவை கொடுக்கிறது. எனக்கான வாய்ப்பு கிடைக்கும்போது எனது பணியை சிறப்பாக செய்வேன்” என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தின்போது கமண்டேட்டர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார் தாஹிர்.