எகிப்தைச் சேர்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை முட்டாள் என விமர்சித்ததாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மெஸ்ஸி எகிப்தில் பயணம் செய்த போது கிசா பிரமிடுகள் குறித்து தாம் விளக்கியதாகவும், ஆனால் அவர் எந்த உணர்ச்சியுமின்றி பாறை போல் இருந்ததாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜாஹி ஹவாஸ் கூறியிருந்தார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது மெஸ்ஸி ஒரு முட்டாள் என அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தாம் அவ்வாறு பேசவில்லை என ஜாஹி ஹவாஸ் தெரிவித்துள்ளார். தம்மிடம் பேட்டியெடுத்தவர் தவறாக மொழிபெயர்த்து விட்டதாகவும் ஹவாஸ் விளக்கம் அளித்துள்ளார். தம்மீது தவறு இருந்தால் மெஸ்ஸியிடமும், அவரது ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் ஜாஹி ஹவாஸ் கூறியுள்ளார்.