இகா ஸ்வியாடெக் முகநூல்
விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்|சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றார் போலந்து வீராங்கனை இகா!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

PT WEB

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், உலகின் 12ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினியை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பயோலினியை எளிதாக வீழ்த்தினார். இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக நான்காவது முறையாகவும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஸ்வியாடெக் வென்று அசத்தியுள்ளார்.

2007ஆம் ஆண்டுக்கு பின் வீராங்கனை ஒருவர் தொடர்ச்சியாக 3 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வது இதுவே முதன்முறையாகும். இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், ஜெர்மனியின் ஷெவரெவ், ஸ்பெயினின் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.