விளையாட்டு

பாராலிம்பிக் பேட்மிண்டன்: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த ஐஏஎஸ் அதிகாரி

பாராலிம்பிக் பேட்மிண்டன்: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த ஐஏஎஸ் அதிகாரி

JustinDurai
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யாதிராஜ், இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யாதிராஜ், இந்தோனேஷியாவின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுஹாஸ் யாதிராஜ் 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாரா பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
சுஹாஸ் யாதிராஜ், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை காலை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சுஹாஸ் யாதிராஜ் பங்கேற்க உள்ளார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற பாராலிம்பிக் ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் தகுதி பெற்றார்.