சர்வதேச அளவில் ரூபிக்ஸ் கியூப் போட்டிகள் 17 வெவ்வேறு பிரிவுகளிள் கீழ் வேகம், துல்லியம் மற்றும் சிக்கலை தீர்கும் திறனை சோதிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. 5 முறையின் 3 சராசரிகளை கணக்கிட்டு சாதனையாளரை மதிப்பிடும் இப்போட்டியானது உலக அளவில் பலரால் வயது வரம்பின்றி ஆர்வத்துடன் ஆடப்பட்டு வருகிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு ஹங்கேரிய சிற்பியும் கட்டிடக்கலை பேராசிரியருமான எர்னோ ரூபிக் என்பவரால் 1974-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கியூப் ஆனது, 2019 கோவிட் காலகட்டத்திற்கு பிறகு இந்தியாவில் மறுமலர்ச்சி கண்டது. சிறுவர்கள் மட்டுமில்லாது வயதில் மூத்தவர்களின் புத்திக்கூர்மையின் பிரதிபலிப்பாக இப்போட்டியை காண்கின்றனர்.
அமெரிக்காவில் பல பள்ளிகளில் உள்ள கல்வியாளர்கள் கணிதத்தில் உள்ள சிக்கலான கணக்குகளை தீர்ப்பதற்கு ரூபிக் கியூபையே பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் உள்ள உலக கியூப் சங்கம் (World Cube Association) உலகளாவிய ரூபிக் கியூப் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திவருகிறது.
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற கியூபிங் போட்டியில் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் அபி, அலெக்ஸ் தம்பதியரின் மகன் இயன் கேண்டியஸ் கலந்துகொண்டார்.
வேகம் மற்றும் துல்லியம் இவற்றில் தரமாக செயல்பட்ட இயன் கேண்டியஸ் 2x2x2 பிரிவில் 1.38 நொடியில் போட்டியை முடித்து சாதனை படைத்தார். இவரின் இந்த ரெக்கார்டானது தேசிய சாதனையான 1.41 ஐ முறியடித்து புதிய சாதனையை எழுதியது.
அதுமட்டுமில்லாமல் இந்த சாதனை தேசிய அளவிலான சாதனை மட்டுமின்றி அமெரிக்காவின் ஆரிகன், வாஷிங்டன், ஐடாகோ மாகாணங்களை உள்ளடக்கிய பசிபிக் வடமேற்கு பகுதியின் புதிய சாதனை ஆகும்.
அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் நடைபெற்ற யூஜின் ஹார்வெஸ்ட் கியூபிங் 2024, மெக்மின்வில்லே கியூப் ஃபால் 2024, கெண்ட் சம்மர் 2024, கில்ஸ்ப்ரோ ஃபேவரைட்ஸ் 2024, கெண்ட் ஸ்பிரிங் 2024, லாக்வுட் நியூகமர்ஸ் 2024 உள்ளிட்ட போட்டிகளில் இறுதிசுற்றுவரை முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயன் கேண்டியஸ் மட்டுமல்லாமல் கடந்தமாதம் ஆந்திரா நெல்லூரை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் மற்றும் ஸ்வப்னா தம்பதியரின் மூத்த மகன் நயன் மவுரியா, சமீபத்தில் சென்னையில் நடந்த கியூப் போட்டியில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்து கொண்டார்.
முதல் முயற்சியிலேயே சைக்கிள் ஓட்டியபடி 271 ரூபிக்ஸ் கியூப்பை 59 நிமிடங்களில் தீர்த்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
2019-ம் ஆண்டு கோவிட் தொற்றின்போது வீட்டிலேயே இருந்த இந்திய சிறுவர்கள் ரூபிக் கியூப் விளையாட்டால் ஈர்க்கப்பட்டு விளையாடிவருகின்றனர். பல்வேறு சிறுவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.