விளையாட்டு

சிறு வயதிலிருந்தே நான் விரும்பிய அணியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல விரும்பவில்லை-மெஸ்ஸி

சிறு வயதிலிருந்தே நான் விரும்பிய அணியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல விரும்பவில்லை-மெஸ்ஸி

EllusamyKarthik

ஆறுமுறை பாலன் டி ஓர் விருதை வென்ற உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸி, பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘நான் பார்சிலோனா அணியிலேயே இருப்பேன்’ என தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் மெஸ்ஸி. 

பார்சிலோனா அணியோடு மெஸ்ஸி ஆண்டுதோறும் மேற்கொண்டு வரும் ஒப்பந்தத்தினால் அவரது முடிவுக்கு சட்ட ரீதியாக சிக்கல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும் மெஸ்ஸியின் கோரிக்கையை ஏற்க மறுத்து அணியிலிருந்து விடுவிக்க பார்சிலோனா மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் ‘லா லிகா’ கால்பந்து தொடரின் நிர்வாகமும் பார்சிலோனாவுக்கு சாதகமாக  தனது முடிவை கடந்த ஞாயிறு அன்று தெரிவித்திருந்த சூழலில் கோல்.காம் என்ற வெப்சைட்டில் மெஸ்ஸி தனது முடிவை தெரிவித்துள்ளார்.

‘சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ள காரணத்தினால் நான் பார்சிலோனாவிலேயே இருக்க முடிவு செய்துள்ளேன். நான்  சந்தோஷமாக இல்லாததால்  அணியை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் சிறு வயதிலிருந்தே நான் விரும்பிய அணியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல விரும்பாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்த சீசன் வரை பார்சிலோனாவிலேயே விளையாடுவேன்’ என மெஸ்ஸி சொல்லியுள்ளார்.