விளையாட்டு

”விளையாடா விட்டால் என்ன.. அணிக்காக எதுவும் செய்வேன்” நெகிழ வைத்த இம்ரான் தாஹிர்

”விளையாடா விட்டால் என்ன.. அணிக்காக எதுவும் செய்வேன்” நெகிழ வைத்த இம்ரான் தாஹிர்

EllusamyKarthik

கடந்த ஐபிஎல் சீசனில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவின் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர்.

துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். 

அண்மையில் நடந்து முடிந்த கரிபியன் பிரீமியர் லீக் தொடரிலும் 15 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியிருந்தார். இருப்பினும் சென்னையின் ஆடும் லெவனில் அவர் இடம் கிடைக்காமல் உள்ள அவர் களத்தில் விளையாடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்துச் செல்லும் பணிகளை அவ்வப்போது கவனித்து வருகிறார். 

இந்நிலையில் அது குறித்து ட்வீட் செய்துள்ளார் தாஹிர்…

“நான் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பல வீரர்கள் எனக்கு டிரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இப்போது நான் அந்த பணியை திரும்ப செய்து வருகிறேன். களத்தில் விளையாடும் வீரர்களுக்கு டிரிங்க்ஸ் கொடுத்து வருகிறேன். அது என் கடமையும் கூட. நான் அணியில் விளையாடுகிறேனா? இல்லையா என்பது விஷயமல்ல. எனது அணி வெற்றிபெறுவதுதான் முக்கியம். 

எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செய்வேன்” என சொல்லியுள்ளார் தாஹிர். 

தாஹிரை ‘பெரிய மனசு படைத்த மனிதர்’ என ட்வீட் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணி ரசிகர்களும் இம்ரான் தாஹிரின் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர்.