விளையாட்டு

நோய்த்தொற்று ஏற்படலாம்; ஆனால் என்னால் போராட முடியும் - ஷிகர் தவான்

நோய்த்தொற்று ஏற்படலாம்; ஆனால் என்னால் போராட முடியும் - ஷிகர் தவான்

webteam

என் உடலில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. விளையாடுவதைப் பற்றி ஒருபோதும் பயப்படவில்லை என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்

ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளதால், கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. இதற்காக பயோ பபுள் எனும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பணியாற்ற உள்ள ஊழியர்கள், அவர்கள் தங்கும் ஹோட்டல் ஊழியர்கள் முதல் பேருந்து ஓட்டுநர் வரை அனைவரும் அதை விட்டு விலகக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.



மேலும் வீரர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது, பக்கத்து அறையினருடன் பேசக்கூடாது. பக்கத்து அறையில் சகவீரர்கள் இருந்தால், பால்கனியில் நின்றுமட்டுமே பேச வேண்டும் என்று பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா காலத்து ஐபிஎல் குறித்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ள ஷிகர் தவான் பேசியுள்ளார்.

அதில், என் உடலில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. விளையாடுவதைப் பற்றி ஒருபோதும் பயப்படவில்லை. எனக்கு எப்போது வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். ஆனால் என்னால் போராட முடியும் என தெரிவித்துள்ளார். மேலும், நிச்சயம் நாம் அனைவரும் பாதுகாப்பாகவே இருக்க வேண்டும். இதுவரை நாங்கள் 8-9முறை கொரோனா பரிசோதனை செய்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்