விளையாட்டு

"வீரர்களின் ஓய்வு அறையில் லேப்டாப் எதற்கு என்று 2002ல் கேட்டேன்"- சச்சின் பகிர்ந்த அனுபவம்

jagadeesh

கிரிக்கெட் வீரர்களின் ஓய்வு (dressing room) அறையில் லேப்டாப் எதற்கு, அதற்கு என்ன அவசியம் என்று 2002 ஆம் ஆண்டு தான் கேட்டதாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் "2002 இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது வீரர்களின் ஓய்வு அறைக்கு லேப்டாப் எதற்கு லேப்டாப் என கேட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் அதன் முக்கியத்துவம் புரிந்தது, எனது மனம் லேப்டாப்பை ஏற்றுக்கொள்ள தொடங்கியது.

எதையும் நாம் ஏற்றுக்கொள்ள தொடங்கும்போதுதான் நம்மால் இந்த உலகத்துடன் ஒத்துவாழ முடியும். லேப்டாப் வந்த பின்பு அணியுடனான ஆலோசனை மிகவும் சுருக்கமாக முடிய வழிவகை செய்தது" என்றார் சச்சின் டெண்டுல்கர்.