விளையாட்டு

“அணிக்காக எந்த இடத்திலும் இறங்கி விளையாடத் தயார்" - ரோகித் ஷர்மா

“அணிக்காக எந்த இடத்திலும் இறங்கி விளையாடத் தயார்" - ரோகித் ஷர்மா

EllusamyKarthik

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஹிட்மேன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா. அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரின் போது இடது காலின் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அது பலத்த சர்ச்சையாக வெடித்தது.


இந்த நிலையில் மும்பை அணிக்காக கடைசி இரு ஆட்டங்களில் ஆடிய ரோகித் சர்மா தனது உடல் திறனை நிரூபித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் அணியில் ரோகித் சேர்க்கப்பட்டார். அதையும்ரசிகர்கள் கேள்வியாக எழுப்பி இருந்தனர். இப்போது அவர் எந்த இடத்தில் பேட் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
“நான் எப்போதும் சொல்வது தான். அணியின் தேவைக்கு ஏற்ப எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் நான் விளையாட தயார். எனக்கு தெரிந்து நான் ஓப்பனராக களம் இறங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் நான் ஆஸ்திரேலியா சென்ற பிறகு தான் அது தெரியும்.


தற்போது அங்கு முகாமிட்டுள்ள அணி நிர்வாகத்தினர் கோலி இந்தியா திரும்பிய பிறகு என்ன செய்ய வேண்டுமென்ற முடிவை எடுத்திருப்பார்கள். அதே போல இன்னிங்க்ஸை யார் ஓப்பன் செய்ய வேண்டுமென்றும் முடிவு செய்திருப்பார்கள்” என பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள ரோகித் சொல்லியுள்ளார்.
மயங்க் அகர்வால், பிருத்வி ஷா என இரண்டு ஓப்பனர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.