விளையாட்டு

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை எத்தனை செஸ் கிராண்ட் மாஸ்டர்கள்?

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை எத்தனை செஸ் கிராண்ட் மாஸ்டர்கள்?

webteam

தமிழ் நாட்டில் சமீப காலமாக செஸ் விளையாட்டில் குழந்தைகள் அதி கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு, இந்தியாவின் செஸ் ஆற்றலை மையமாக கொண்டுள்ள ஒரு மாநிலமாக எப்போதும் திகழ்ந்து வந்திருக்கிறது. இதுவரை, இந்தியா 79 கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இது நாட்டின் கிராண்ட்மாஸ்டர்கள் பட்டியலில் 35 சதவீத பங்களிப்பாகும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் சுப்பராமன் விஜயலட்சுமி உட்பட இதுவரை ஏழு பெண் கிராண்ட்மாஸ்டர்களை இந்தியா கண்டுள்ளது. ஜூலை 17, 2022 நிலவரப்படி, FIDE தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 477 வீரர்களைக் கொண்டுள்ளது; இது ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 209 என்ற எண்ணிக்கையை கொண்ட ரஷ்யாவை விட அதிகமாகும்.

ஆகவே, தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிகமாக 26 கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர், ஹரியானாவில் 1, டெல்லியில் 6, ராஜஸ்தானில் 1, குஜராத்தில் 2, மகாராஷ்டிராவில் 10, கோவாவில் 2, கர்நாடகாவில் 3, கேரளாவில் 4, மேற்கு வங்கத்தில் 8, ஒடிசாவில் 2, தெலங்கானாவில் 5 மற்றும் ஆந்திர பிரதேசத்தில் 4 கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர்.

இதில் காரைக்குடியை சேர்ந்த ப்ரனேஷ் என்ற 15 வயது மாணவன் படைத்த சாதனைகள் ஏராளம். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், செஸ் போட்டியில் இது வரை 58-க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார். கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, தமிழ் நாட்டிற்கு பெருமைத் தேடி தந்துள்ளார். அதற்கான அப்போதைய முதல்வரிடம் 2 லட்சம் காசோலையும் பாராட்டு பத்திரமும் பெற்றுள்ளார். 2020 ஆண்டு ரஸ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைப்பெற்ற ரோப்பிளாக் கிராண்ட் மாஸ்டர் போட்டியில் , ரஸ்யாவின் கிராண்ல் மாஸ்டர் ஃபோரிஸ், இந்திய கிராட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி போன்றோருடன் போட்டியிட்டு வென்றுள்ளார். வருங்காலத்தில் இந்தியாவில்  மேலும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகிறார்கள் என்பதில் ஐயமில்லை.