விளையாட்டு

பரிசு அறிவிப்பு ஊடகச் செய்திக்காகவா? ஒலிம்பிக் நாயகி வருத்தம்

பரிசு அறிவிப்பு ஊடகச் செய்திக்காகவா? ஒலிம்பிக் நாயகி வருத்தம்

Rasus

ஹரியானா அரசு அறிவித்த பரிசுத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை என ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மலிக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதே போல் வெள்ளிப்பதக்கம் வென்றால் 4 கோடி ரூபாயும், வெண்கலப்பதக்கம் வெல்வோருக்கு இரண்டரை கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்தவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாக்ஷி மலிக். 58 கிலோ ஃப்ரீஸ்டைல் ரெஸ்லிங் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். ஆனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று 6 மாதங்களாகியும் மாநில அரசு அறிவித்த பரிசுத்தொகை அவருக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சாக்ஷி மலிக், ’ஹரியானா அரசின் அறிவிப்பு ஊடகங்களுக்கானது மட்டும் தானா?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.