விளையாட்டு

கொல்கத்தா அணியில் காயம் காரணமாக விலகிய வீரர் - களமிறங்கும் மாற்று வீரர்

சங்கீதா

கொல்கத்தா அணியில் இருந்து காயம் காரணமாக ரஷிக் சலாம் விலகியநிலையில், ஹர்ஷித் ராணா டெல்லி அணியிலிருந்து வாங்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனே மைதானங்களில், 2022-ம் ஆண்டுக்கான, 15-வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 24 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 25-வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், கொல்கத்தா அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.

அந்த அணி, தனது தொடக்க ஆட்டத்தில், சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது. பெங்களூரு அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லி அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்று இருந்தது.

ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா 4-வது வெற்றியை பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக, ரஷிக் சலாம் முற்றிலுமாக விலகியநிலையில், வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா டெல்லி அணியிலிருந்து, அவரது அடிப்படை தொகையான 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.