விளையாட்டு

KKR vs MI : கடந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக மரண காட்டு காட்டிய ஹர்திக் பாண்டியா 

KKR vs MI : கடந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக மரண காட்டு காட்டிய ஹர்திக் பாண்டியா 

EllusamyKarthik

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் 25 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் மும்பை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 6 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. 

கடந்த சீசனில் ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 232 ரன்களை குவித்திருந்தது. 

பெரிய டார்கெட்டை சேஸ் செய்த மும்பை அணி 58 ரன்கள் மட்டுமே குவித்து 4 விக்கெட்டுகளை இழந்திருக்கும். 

இனி மும்பையின் கதை முடிந்தது என அந்த போட்டியை பார்த்த ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டிருக்க ‘அப்படியெல்லாம் அசால்ட்டா விட்டுட முடியாது’ என களம் இறங்கி ஆடினார் ஹர்திக் பாண்டியா. 

34 பந்துகளில் 91 ரன்களை குவித்தார். 9 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை அடித்த அவரது ஸ்ட்ரைக் ரேட் 267.65.

இறுதிவரை போராடிய அவர் ஹாரி கர்னி பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அந்த போட்டியில் மும்பை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

கொல்கத்தாவுடனான இரண்டாவது லீக் ஆட்டத்தில் பவுலராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையை வெற்றிபெற செய்து பழிதீர்த்திருப்பார் ஹர்திக். 

அதே ஆட்டத்தை இன்றைய போட்டியிலும் ஹர்திக் ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.