விளையாட்டு

சுற்றுச்சூழல் போராளி கிரேட்டாவுக்கு எதிராக களமிறங்கிய இளம்பெண்..!

சுற்றுச்சூழல் போராளி கிரேட்டாவுக்கு எதிராக களமிறங்கிய இளம்பெண்..!

jagadeesh

சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பெர்க்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த 19 வயதான நவோமி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

ஸ்வீடனை சேர்ந்த 17 வயது சிறுமியான கிரேட்டா தன்பெர்க் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் தீங்குகள் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் புவி வெப்பமயமாதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்புப் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க் புரிதல் இல்லாமல் பேசுவதாகவும், பருவநிலை மாறுபாடு குறித்து அறிவியல் உண்மைகளை ஆராயாமல் கிரேட்டா பேசிவருவதாக நவோமி தெரிவித்துள்ளார். மனிதர்களாலேயே புவி வெப்பமடைவதாக முரண்பாடான கருத்துகளை மக்களிடையே கூறி கிரேட்டா, அச்சத்தை ஏற்படுத்திவருவதாக கூறும் நவோமி, அமெரிக்காவில் இந்த வாரம் நடக்கக்கூடிய சிபிஏசி மாநாட்டில் பங்கேற்று தன் கருத்துகளை முன்வைக்க உள்ளார்.