விளையாட்டு

தோனியின் இந்த சாதனையை எப்போதும் முறியடிக்க முடியாது : பந்தயம் கட்டும் காம்பீர்

தோனியின் இந்த சாதனையை எப்போதும் முறியடிக்க முடியாது : பந்தயம் கட்டும் காம்பீர்

webteam

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுதந்திரனம் அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவர் தொடர்பாக நீண்ட நாட்களாக சுற்றி வந்த வதந்திகளுக்கும், பேசுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. தோனியின் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கருத்து தெரிவித்துள்ள கவுதம் காம்பீர், “தோனியின் ஒரு சாதனை மட்டும் எப்போதும் இருக்கும். மற்ற எந்த கேப்டனாலும் அந்த சாதனையை முறியடிக்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் தொடர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இந்த மூன்று கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற சாதனையை இனி யாரும் அடைய முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

“இந்த சாதனை மட்டும் என்றும் நிலைத்திருக்கும் என நான் பந்தயம் கட்டுகிறேன். அதிக சதங்களை அடித்தவர் முறியடிக்கலாம், ரோகித் ஷர்மாவின் இரட்டை சதத்திற்கு அதிகமான ஸ்கோர் என்ற சாதனையை முறியடிக்கலாம், ஆனால் எந்த ஒரு இந்திய கேப்டனும் 3 கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற சாதனையை மட்டும் புரியவே முடியாது” என்று கவுதம் தெரிவித்தார்.