விளையாட்டு

‘பாகிஸ்தான் பயணத்தில் தோனியை அணியில் சேர்க்க கங்குலி உறுதியாக இருந்தார்’- ஜான் ரைட்

‘பாகிஸ்தான் பயணத்தில் தோனியை அணியில் சேர்க்க கங்குலி உறுதியாக இருந்தார்’- ஜான் ரைட்

EllusamyKarthik

கடந்த 2004 மார்ச் மற்றும் ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த தொடரில் தோனியை அணியில் சேர்ப்பதில் அப்போதைய கேப்டன் கங்குலி உறுதியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட். 

‘திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பவர் கங்குலி. பாகிஸ்தான் தொடருக்கான அணி தேர்வின்போது தோனியை குறித்து சொன்னார் கங்குலி. அப்போது தான் தோனியின் பெயரை நான் முதன்முதலில் கேள்விப்பட்டேன். பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் தோனியை அணியில் சேர்க்க முடியாமல் போனது. 

ஒருநாள் தொடரில் ராகுல் ட்ராவிட்டும், டெஸ்ட் தொடரில் பார்த்தீவ் பட்டேலும் கீப்பராக அந்த தொடரில் செயல்பட்டனர். மாடர்ன் டே கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். 

எனது பயிற்சியின் கீழ் அவர் விளையாடியபோது சொல்வது அனைத்தயும் கேட்டுக் கொண்டு, அதை அப்படியே உள்வாங்கி அனைத்து நேரங்களிலும் அதை அப்ளை செய்து விளையாடுவார்.

அதை நான் உணர்ந்தபோதே தோனி பெரிய கிரிக்கெட்டராக வருவார் என கணித்திருந்தேன்’ என தெரிவித்துள்ளார் ஜான் ரைட். தோனி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது முதல் ஆட்டத்தை இந்தியாவுக்காக டிசம்பர் 2004 இல் விளையாடியது குறிப்பிடத்தக்கது.