விளையாட்டு

பிரெஞ்சு ஓபன்: நடால், ஃபெடரர் கால் இறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன்: நடால், ஃபெடரர் கால் இறுதிக்கு முன்னேற்றம்

Rasus

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆ‌ண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்கள் ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான, பிரெஞ்சு ஓப‌ன் போட்டிகள், பிரான்ஸ் ‌தலை‌நகர் ‌பாரிஸில் நடை‌பெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று போட்டியில், நடப்புச் சாம்பியனான ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால், அறிமுக வீரரான அர்ஜெண்டினாவின் ஜூயன் இக்னாசியோவை எதிர்கொண்டார். தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த நடால் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட் க‌ணக்கில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் களிமண் தரை நாயகனான நடால் பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் தனது 90-வது வெற்றியை பதிவு செய்தார்.

மற்றொரு போட்டியில், 3‌‌7 வயதான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அர்ஜெண்டினாவின் லியோநார்டோ மேயரை எதிர்கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக பிரெஞ்சு ஓப‌ன் போட்டிகளில் விளையாடாத நிலையில், ஃபெடரர் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் தொடரி‌ல், அதிக வயதில் கா‌ல் இறுதிக்கு முன்னேறிய வீ‌ரர் என்ற சாதனைக்கு சொந்தகாரராகியுள்ளார் ஃபெடரர்.