விளையாட்டு

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால், ஜோக்கோவிச் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

webteam

பிரஞ்ச் ஓபன் டென்னிஸில் முன்னணி வீரர்களான ஜோக்கோவிச், நடால் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

இரண்டாம் நிலை வீரரும் நடப்புச் சாம்பியனுமான நோவக் ஜோக்கோவிச் முதல் சுற்றில், ஸ்பெயின் வீரர் மார்செல் க்ரனோலர்ஸ்-ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோக்கோவிச் 6-3, 6-4,6-2 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்றார். நான்காம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் முதல் சுற்றில், பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பையரை 6-1, 6-4, 6-1 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார்.