விளையாட்டு

வீணான கோலியின் ஆட்டம்! இந்தியாவை முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் வென்றது பாகிஸ்தான்!

வீணான கோலியின் ஆட்டம்! இந்தியாவை முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் வென்றது பாகிஸ்தான்!

EllusamyKarthik

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டியில் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. 

152 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பாகிஸ்தான். அந்த அணிக்காக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய பவுலர்களின் பந்து வீச்சை அஞ்சாமல் அடித்து ஆடி, ரன்களை குவித்தனர் இருவரும். 

சிங்கிள், டூ, பவுண்டரி, சிக்சர் என ரன் வேட்டைக்கு ரெஸ்ட் கொடுக்காமல் இருவரும் விளையாடினர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் 40 பந்துகளில் 50 ரன்களை பதிவு செய்திருந்தார். மறுபக்கம் ரிஸ்வான் 41 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். இருவரும் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.10 விக்கெட் வித்திகயாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றி உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி.

முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜடேஜா என ஐந்து பவுலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்த தவறினர்.