Olympic football pt desk
கால்பந்து

ஒலிம்பிக்: மைதானத்தில் ஊடுருவிய ரசிகர்கள்.. பாதியில் நிறுத்தப்பட்ட கால்பந்து போட்டி – நடந்தது என்ன?

பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் ரசிகர்களின் ஊடுருவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

webteam

ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா, மொராக்கோ அணிகள் மோதின. பாரிஸ் நகரில் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி கோல்களை அடித்து வெற்றியை நோக்கி முன்னேறின.

மொராக்கோ அணி 2 கோல்களுடன் முன்னிலையில் இருந்தபோது மைதானத்திற்குள் ரசிகர்கள் ஊடுருவினர். தண்ணீர் பாட்டில்கள், பதாகைகளை வீசி ரசிகர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்ட நிலையில், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

football fans

ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. ஆட்டத்தின் இறுதியில் அர்ஜென்டினா அணி ஒரு கோல் அடித்த சூழலில் ஆட்டம் சமனில் முடிந்தது. எனினும் வி.ஏ.ஆர்.முறைப்படி அர்ஜென்டினா அணி அடித்த கோல் கணக்கில் ஏற்கப்படவில்லை.

இதனால் கோபா அமெரிக்கா சாம்பியனான அர்ஜென்டினாவை 2:1என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றது.