India vs Qatar pt desk
கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து தகுதிசுற்றுப் போட்டி: நடுவர்களின் சர்ச்சைக்குரிய முடிவால் வெளியேறிய இந்தியா

உலகக் கோப்பை கால்பந்து தகுதிசுற்றுப் போட்டியில், நடுவர்களின் சர்ச்சைக்குரிய முடிவால் கத்தாரிடம் தோல்வியடைந்த இந்திய அணி, உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

webteam

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிசுற்றுப் போட்டிகள், தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், இரண்டாவது கட்ட தகுதிசுற்றுப் போட்டியில், இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதின.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 37-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் லல்லியன் சுவாலாசாங்டேஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தில் இந்தியா முன்னிலை பெற்றது.

India vs Qatar

ஆனால் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், கத்தாருக்கு சர்ச்சைக்குரிய வகையில் கோல் வழங்கப்பட்டது. இந்தியாவின் கோல் போஸ்ட்டிற்கு வெளியே, எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை உள்ளே இழுத்து, கத்தாரின் யூசுப் அய்மன் கோல் அடித்தார். கோட்டைத் தாண்டினால் பந்து OUT OF PLAY ஆகும். இருப்பினும் கத்தாருக்கு கோல் வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்த கோல் காணொளி இங்கே...

இந்த சர்ச்சைக்குரிய கோல் காரணமாக, ஆட்டம் சமன் ஆன நிலையில், 85-ஆவது நிமிடத்தில் கத்தார் 2வது கோலை அடித்தது. இதன் பின்னர் கோல் அடிக்க முடியாத இந்தியா, 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து, உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள இந்திய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.