ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை கொண்டாடும் இளைய தலைமுறைகள் பலரும் அறியாத கால்பந்து ஜாம்பவன்... கால்பந்து விளையாட்டை அறிந்தவர்களால் தவிர்க்க முடியாத பெயர் பீலே...
பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவான் பீலே. 1960, 70ஆம் ஆண்டுகாலத்தில் எதிரணி வீரர்களுக்கு களத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். மூன்று முறை உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். இப்படி பல சாதனைகளுக்கு உரியவரான பீலே, உலக அமைதிக்கான சர்வதேச விருதையும் பெற்றிருக்கிறார்... 22 ஆண்டு கால கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் ஆயிரத்துக்குத் அதிகமான கோல்களையும் அடித்துள்ளார்.
ஃபிஃபா உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர் என்று கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம் பெற்றிருக்கிறார். 16 ஆவது வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, தனது நாட்டு அணியில் 1971-ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்தார். பிரேசில் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பீலே இருந்திருக்கிறார்.