england team x page
விளையாட்டு

PAKvENG| 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்... முதல்முறையாக மோசமான சாதனையைப் படைத்த பாகிஸ்தான்!

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், பாகிஸ்தான் அணி முதல்முறையாக மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

Prakash J

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாளில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், பல சாதனைகள் படைக்கப்பட்டன. குறிப்பாக, அவ்வணில் முச்சம் (317) அடித்த ஹாரி புரூக்கும், இரட்டைச் சதம் (262) அடித்த ஜோ ரூட் பல்வேறு சாதனை பட்டியலில் இடம்பிடித்தனர்.

இதையும் படிக்க: வங்கதேசம் | பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம்.. காளி கோயிலில் திருட்டு.. போலீஸ் விசாரணை!

இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி, 220 ரன்களுக்குச் சுருண்டது. இதன்மூலம் 47 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றிபெற்றது. 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து தோல்வி அடைந்த ஒரே அணியாக பாகிஸ்தான் மோசமான சாதனையை படைத்திருக்கிறது. இதுவரையில் எந்த ஒரு அணியும் 500க்கும் மேற்பட்ட ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்து தோல்வி அடைந்தது கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட் கடந்து வந்த மூன்று நூற்றாண்டுகளில் இப்படியான அரிய தோல்வியை பாகிஸ்தான் அணி அடைந்திருக்கிறது.

இவ்விரு அணிகளுக்கான 2வது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 15ஆம் தேதி, இதே முல்தான் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளதால், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையும் படிக்க: ரத்தன் டாடா மறைவு | சர்ச்சைக்குரிய இரங்கல் பதிவு.. எழுந்த எதிர்ப்பு... உடனே நீக்கிய பேடிஎம் சி.இ.ஓ.!