விளையாட்டு

முதல் டி20 போட்டி: வெற்றியுடன் துவங்குமா இந்தியா? டாஸ் வென்ற ஆஸி. பவுலிங் தேர்வு!

முதல் டி20 போட்டி: வெற்றியுடன் துவங்குமா இந்தியா? டாஸ் வென்ற ஆஸி. பவுலிங் தேர்வு!

ச. முத்துகிருஷ்ணன்

ஆசியக் கோப்பை தொடரில் அடைந்த தோல்விகளில் இருந்து மீள்வதுடன், டி20 உலகக் கோப்பை தொடருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பதால் பவுலிங் பிரிவு வலுப்பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆசியக் கோப்பை தொடரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதம் விளாசிய விராட் கோலி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு எதிராகவும் ரன் குவிப்பை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாமல் இந்தியாவுக்கு எதிரான தொடரை சந்தித்தாலும், வலுவான அணியாகவே கருதப்படுகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் சமீப காலமாக போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், பழைய நிலைக்கு திரும்ப இந்த தொடரை பயன்படுத்தி கொள்ளும் முனைப்பில் உள்ளார். இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்
பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.