விளையாட்டு

'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா

'நெக்ஸ்ட் ரவுண்டு'க்கு தயாரானது ரஷ்யா

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடும் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ரஷ்யாவும், எகிப்தும் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் ரஷ்யா 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று, தனது அடுத்து சுற்று ஆட்டத்துக்கு துண்டு போட்டு வைத்துள்ளது. 

எகிப்து அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் முகமது சாலாஹ் நேற்றையப் போட்டியில் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கினார். இதனை அறிந்துக்கொண்ட ரஷ்யா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை காட்டியது. ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் அஹ்மது பாதி, 59வது நிமிடத்தில் செரிஷேவ், 62 வது நிமிடத்தில் டிசூபா கோலடிக்க 3-0 என ரஷ்யா முன்னிலை பெற்றது. நட்சத்திர வீரர் சாலாஹ் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 73வது நிமிடத்தில் எகிப்துக்காக ஒரு கோலடித்தார்.

ஆனால் அதன் பின்பு கோல் அடிக்கும் வாய்ப்புகள் எகிப்து அணிக்கு கிடைக்கவேயில்லை. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி வென்று, ஏ பிரிவின் புள்ளிப் பட்டியிலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. ஆனால் தொடர்ந்து இரண்டு தோல்விகளை கண்டுள்ள எகிப்து அணி, அடுத்த சுற்றுக்கு செல்லாமல் போட்டியில் இருந்து வெளியே செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.