விளையாட்டு

’தடைக்குப் பின்னால் சதி...’ போராட்டத்தில் ஈடுபட்ட ஷகிப் அல் ஹசன் ரசிகர்கள்

’தடைக்குப் பின்னால் சதி...’ போராட்டத்தில் ஈடுபட்ட ஷகிப் அல் ஹசன் ரசிகர்கள்

webteam

ஐசிசி-யால் தடை விதிக்கப்பட்ட ஷகிப் அல் ஹசனுக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 அணி கேப்டனாக இருந்தவர், மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன். 2018ஆம் ஆண்டு பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடரில், சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த தரகர் ஒருவர் ஷகிப்பை அணுகியுள்ளார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போதும் தொடர்பு கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஷகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்கவில்லை. இதனால் ஐசிசி, ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பதாக அறிவித்தது. ஷகிப் தனது தவறை ஒப்புக் கொண்டதால் அவரின் தடை ஒராண்டாக குறைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஐசிசியின் இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஷகிப் அல் ஹசனின் ரசிகர்கள், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல ஷகிப்பின் சொந்த மாவட்டமான மகுராவிலும் சுமார் 700-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடி, ஐசிசி-க்கு எதிராகவும் இதற்கு பின்னால் பெரிய சதி இருப்பதாகவும் கோஷங்களை எழுப்பினர்.