விளையாட்டு

இந்திய தோல்வியை கிண்டலடித்த மைக்கல் வாகன்: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!

jagadeesh

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியை கிண்டலடித்து பதிவிட்ட முன்னாள் வீரர் மைக்கல் வாகனுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. அந்தப் போட்டியில் தன்னுடைய 100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன். அவரை பெருமைப்படுத்தும்விதமாக இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசளித்தனர்.

இப்போது மைக்கல் வாகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "காபாவில் டெஸ்ட் போட்டியை வென்ற பின்பு நாதன் லயனுக்கு கையெழுத்திட்ட ஜெர்சியை 100-ஆவது டெஸ்டுக்காக பரிசளித்தனர். அதேபபோல ஜோ ரூட்டுக்கும் தோல்விக்கு பின்பு ஜெர்சியை பரிசளித்திருக்கிறார்களா? இதுபோல எதாவது நிகழ்ந்ததா ? யாராவது அதனை உறுதிப்படுத்த முடியுமா?" என நக்கலடித்து பதிவிட்டுள்ளார்.

இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் "முதல் போட்டியில்தான் தோற்று இருக்கிறோம். தொடரை வென்ற பின்பு இந்தியா ஜோ ரூட்டுக்கு பரிசளிக்கும்" எனத் தெரிவித்துள்ளனர்.