விளையாட்டு

ஒரு டெஸ்ட்டில் விளையாட தென்னாப்பிரிக்க கேப்டனுக்கு தடை!

ஒரு டெஸ்ட்டில் விளையாட தென்னாப்பிரிக்க கேப்டனுக்கு தடை!

webteam

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் டு பிளிசிஸ் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. கேப்டவுணில் நடந்த இரண்டாவ து டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 177 ரன்களும், தென்னாப்பிரிக்கா 431 ரன்களும் எடுத்தன. 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங் சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 3-வது நாள் முடிவில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக் காவுக்கு 41 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-வது நாளான நேற்று இலக்கை எட்டி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று. தொடரையும் கைப்பற்றியது. 

இந்த டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி, பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அணியின் கேப்டன், பாப் டு பிளிஸ்சிஸ்-க்கு 20 சதவீத மும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் பிளிஸ்சிஸ்க்கு ஒரு டெஸ் டில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

ஒரு வருடத்தில் 2-வது முறையாக இது போன்ற பிரச்னையில் சிக்கினால், தடை விதிக்கப்படும். டு பிளிஸ்சிஸ் ஏற்கனவே, இந்தியாவுக்கு எதிரான டெஸ்டின் போதும் மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கி இருந்தார்.

இந்த தடை காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிராக 11 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கும் 3 வது டெஸ்டில் அவர் ஆடமாட்டார்.