விளையாட்டு

'அதிகமானோர் டிவியில் பார்ப்பார்கள்; வியூவர்சிப் சாதனையை ஐபிஎல் படைக்கும்' - கங்குலி

'அதிகமானோர் டிவியில் பார்ப்பார்கள்; வியூவர்சிப் சாதனையை ஐபிஎல் படைக்கும்' - கங்குலி

webteam

வியூவர்சிப் சாதனையை வரும் ஐபிஎல் படைக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்

ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளதால், கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. இதற்காக பயோ பபுள் எனும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பணியாற்ற உள்ள ஊழியர்கள், அவர்கள் தங்கும் ஹோட்டல் ஊழியர்கள் முதல் பேருந்து ஓட்டுநர் வரை அனைவரும் அதை விட்டு விலகக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வீரர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது, பக்கத்து அறையினருடன் பேசக்கூடாது. பக்கத்து அறையில் சகவீரர்கள் இருந்தால், பால்கனியில் நின்றுமட்டுமே பேச வேண்டும் என்று பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் வீரர்கள், ஊழியர்களை கொரோனா சீண்டியுள்ளது. தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு பிறகான கிரிக்கெட் போட்டி, கிரிக்கெட் போட்டிக்கான நீண்ட நாட்கள் காத்திருப்பு என வரும் ஐபிஎல்க்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் போட்டிகளை ஒளிபரப்பும் சேனல்களுக்கு கடுமையான லாபத்தை கொடுக்கும் என தெரிகிறது.

இந்த முறை வியூவர்சிப் சாதனையை வரும் ஐபிஎல் படைக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், எதிர்பார்ப்பு அதிகமாகவும், கொரோனா அச்சுறுத்தலும் இருப்பதால் ரசிகர்கள் போட்டியை அதிகளவில் டிவியில் பார்ப்பார்கள். இதனால் அதிக வியூவர்சிப்பை சேனல்கள் எதிர்பார்க்கின்றன.

எங்கும் பாசிட்டிவ் விஷயங்களும் உள்ளன என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின் இன்னும், 5 அல்லது 6 மாதத்திற்குள் எல்லாம் சரியாகும் என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்,