விளையாட்டு

250அடி பள்ளத்தில் விழுந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்: மலையேற்றத்தின் போது நிகழ்ந்த விபரீதம்

250அடி பள்ளத்தில் விழுந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்: மலையேற்றத்தின் போது நிகழ்ந்த விபரீதம்

webteam

மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சேகர் கவ்லி 250 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேகர் கவ்லி (45). பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த இவர், மகாராஷ்டிர அணியின் சார்பில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். அத்துடன் 2 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தற்போது மகாராஷ்டிராவின் 23 வயதிற்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராகவும், உடற்தகுதி பயிற்சியாளராகவும் இருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றிருந்தார். அப்போது 250 அடி பள்ளத்தில் அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை இன்று காலை 10 மணிக்கு கைப்பற்றிய ஐகாட்புரி காவல்துறையினர், பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அவரது மறைவிற்கு மும்பை கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த சோகமான தருமணத்தில் அவரது குடும்பத்திற்கு மகாராஷ்டிர கிரிக்கெட் வாரியம் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.