விளையாட்டு

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

Veeramani

நேற்று இங்கிலாந்து சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணியை இங்கிலாந்து அணி எளிதில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற இங்கிலாந்துஅணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. களமிறங்கிய அயர்லாந்து அணி 28 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேம்பர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 59 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.கடைசி கட்டத்தில் மெக் பிரின் 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் அயர்லாந்து அணி 44.4 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. சாம் பில்லிங்சும், இயன் மார்கனும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சாம் பில்லிங்ஸ் அரை சதமடித்தார். அவர் 67 ரன்னுடனும், இயன் மார்கன் 36 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. வில்லே ஆட்டநாயகன் விருது பெற்றார்.