வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை மூன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.
லண்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் எவின் லீவிஸ் 130 பந்துகளில் 176 ரன்கள் விளாசினார். காயம் காரணமாக அவர் வெளியேறினார்.
இங்கிலாந்து அணி 35.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பட்லர்(43), மொயீன் அலி(48) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக தீர்மானிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜேசன் ராய் 84 ரன்கள் எடுத்தார்.