இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடந்து வருகிறது . எற்கெனவே தலா இரு போட்டியில் வென்று இரு அணிகளும் சமநிலையில் இருந்த நிலையில் 5-வது மற்றும் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி சார்பில் கப்டில் - முன்ரோ தொடக்க ஜோடியாக களம் இறங்கியது. முன்ரோ ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற ,பின்னர் வந்த வீரர்களும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் சாண்ட்னர் 67 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் சார்பில்ச்மற்றும் ரஷித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து எளிதான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டகார்களாக இறங்கிய ஹேல்ஸ் 74 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேற மற்றொரு தொடக்க வீரர் பேரிஸ்டோ நியூஸிலாந்து பந்துவீச்சை நாலபுறமும் பறக்க விட்டார். 60 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகலுடன் 104 ரன்கள் குவித்து பேரிஸ்டோ ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 32.4 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 5 ஒருநாள் தொடர் கொண்ட போட்டியில் 3-2 என்ற் கணக்கில் தொடரை வென்றது. ஆட்ட நாயனாக பேரிஸ்டோவும் ,தொடர் நாயகனாக வோக்ஸ் தெர்வு செய்யப்பட்டனர்,