விளையாட்டு

"எந்த விஷயத்தையும் எல்லையை மீற விடமாட்டேன்" ஜோப்ரா ஆர்ச்சர் !

"எந்த விஷயத்தையும் எல்லையை மீற விடமாட்டேன்" ஜோப்ரா ஆர்ச்சர் !

jagadeesh

எந்த விஷயத்தையும் அதன் எல்லையை மீற விடமாட்டேன் என்று நிறவெறி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே உயிர் பாதுகாப்பு சூழலுக்கு (Biosecurity bubble) நடுவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் விதிகளை பின்பற்றி ஆடி வருகின்றனர். முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதன்பின் 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 24 ஆம் தேதி தொடங்குகிறது.

முன்னதாக இரண்டாவது போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இங்கிலாந்து அணியிலிருந்து ஜோப்ரா ஆர்ச்சர் கொரோனா விதிகளை மீறியதற்காக நீக்கப்பட்டார். இதனையடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் 5 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் விதிகளை மீறியதற்காக ஜோப்ரா ஆர்ச்சருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. 

இதனையடுத்து ஓல்ட் டிராப்போர்டில் உள்ள ஹோட்டலில் 5 நாள்கள் தனிமைப்படுத்துதலில் ஜோப்ரா ஆர்ச்சர் வைக்கப்பட்டார். சில கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர், தொடர்ச்சியாக அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என முடிவு வந்துள்ளது. இதனை தொடர்ந்து தொடரை முடிவு செய்யும் இறுதி போட்டியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் 5 நாள்கள் தனிமையில் இருந்தபோது அவருக்கு சிலர் இனவெறி தொடர்பாக சீண்டியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து இங்கிலாந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் "கடைசி டெஸ்ட் போட்டியில் என்னுடைய 100 சதவிதச திறமையை வெளிப்படுத்துவேன். ஆனால் தனிமையில் இருந்து 5 நாள்களில் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனவெறித் தொடர்பான கருத்துகள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. கால்பந்தாட்ட வீரர் வில்பிரையிட் ஸாஹா என்ற 12 வயது சிறுவன் மிரட்டப்பட்டான். இதனையடுத்து அவன் நடவடிக்கை எடுத்தான். எனவே இனவெறியுடன் மிரட்டப்பட்டதில் இருந்து இணையத்தில் நான் ஒரு கோடு போட்டுக் கொண்டுள்ளேன். எந்த விஷயமும் அந்த எல்லையை மீற விடமாட்டேன். என் புகார்களை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு அனுப்பி உள்ளேன். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.