விளையாட்டு

உலகக் கோப்பைக்குப் பிறகு டுமினி ஓய்வு

உலகக் கோப்பைக்குப் பிறகு டுமினி ஓய்வு

webteam

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற இருப்பதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜே.பி.டுமினி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி மே மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் நடக்கிறது. ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டிக்குப் பிறகு பல முன்னணி வீரர்கள் பலர் ஓய்வு பெற இருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல், இந்திய அணியின் யுவராஜ் சிங் சிங் உட்பட பல வீரர்கள் ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளனர். இதே போல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் 34 வயதான டுமினியும் ஓய்வு பெற உள்ளார். இதை அவர் நேற்று தெரிவித்தார்.

தோள்பட்டை காயத்துக்கு ஆபரேஷன் செய்த டுமினி நான்கு மாத ஓய்வுக்கு பிறகு சமீபத்தில் அணிக்கு திரும்பி இருந்தார். இலங்கைக்கு எதிராக கேப்டவுனில் நடக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் அவர் களம் இறங்க இருக்கிறார். 

இதுவரை 193 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5,047 ரன்களும், 68 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ள டுமினி, ஏற்கனவே டெஸ்ட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று விட்டார்.  உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20 தொடர்களில் பங்கேற்பேன் என்று டுமினி தெரிவித்துள்ளார்.