நடப்பாண்டு ஐபிஎல் டி20 போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்ஸராக டீரீம் 11 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 250 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ கடந்த சில நாள்களுக்கு முன்பாக தெரிவித்ததாக கூறப்பட்டது.இதனையடுத்து டைட்டில் ஸ்பான்ஸர்களை பிசிசிஐ தேடுவதாக செய்திகள் வெளியானது.
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸாரக இருப்பதற்கு பைஜூஸ், கொகோ கோலா, ஜியோ, ட்ரீம் 11, அமேசான், டாடா குழுமம், அதானி குழுமம் ஆகியவை போட்டிப் போட்டதாக கூறப்பட்டது. விவோ ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக இருக்க ரூ.440 கோடி கொடுத்து வந்தது. இப்போது டிரீம் 11 நிறுவனம் 250 கோடி ரூபாய்க்கு ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.