விளையாட்டு

”எங்க அப்பா வீட்டில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்; அதனால..”-டிராவிட் மகன் குறித்து கங்குலி சுவாரஸ்யம்

Veeramani

ராகுல் டிராவிட்டின் மகன் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்ததாக சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இது பற்றிய ஒரு சுவாரஸ்யமான உரையாடலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தனது தந்தையின் நியமனத்தில் ராகுல் டிராவிட்டின் மகன் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நகைச்சுவையாக கூறியுள்ளார்.

“ஒருநாள் டிராவிட்டின் மகனிடம் இருந்து போன் கால் வந்தது. அப்போது பேசும்போது, வீட்டிற்குள் என் தந்தை மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்; அதனால் அவருக்கு வெளியே ஏதேனும் வேலை கொடுங்கள் என்று அவர் கூறினார். அதனால்தான், ராகுல் டிராவிட் இடம், ‘நீங்கள் தேசிய அணியில் சேர்வதற்கான நேரம் இதுதான் என்று கூறினேன்” என்று கங்குலி நகைச்சுவையுடன் கூறினார். 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ இந்த மாத தொடக்கத்தில் நியமித்தது. நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்து டி 20 போட்டிகள் முதல் ரவி சாஸ்திரியிடம் இருந்து ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.