விளையாட்டு

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் திணறல்!

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் திணறல்!

webteam

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாஸில் தொடங்கியது. இது பகலிரவு டெஸ்ட் போட்டி. வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றமில்லை. 

கடந்த டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். சண்டிமாலுக்குப் பதிலாக தனுஷ்கா குணதிலகாவும் சுழல்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயாவுக்கு பதிலாக தில்ருவான் பெராராவும் சேர்க்கப்பட்டனர்.

(டோவ்ரிச், ஹோல்டர்)

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பிராத்வெயிட்டும் ஸ்மித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இருவருமே தலா 2 ரன்களில் வீழ்ந்தனர். இருவரின் விக்கெட்டையும் லக்மல் வீழ்த்தினார். அடுத்து வந்த கேரன் பாவெலை குமரா 4 ரன்களில் அவுட் ஆக்கினார். பின்னர் வந்த ஷாய் ஹோப்பை 11 ரன்களிலும் ரோஸ்டன் சேஸை 14 ரன்களிலும் வீழ்த்தினார் ரஞ்சிதா. அடுத்த வந்த விக்கெட் கீப்பர் டோவ்ரிச்சும் கேப்டன் ஹோல்டரும் அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். திடீரென மழை குறுக்கிட்டதால் 46.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதல் நாள் போட்டி நிறுத்தப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. 

டோவ்ரிச் 60 ரன்களுடனும் ஹோல்டர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.