உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் ரஷ்ய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என டால்ஃபின்கள் ஆருடம் தெரிவித்துள்ளன.
ரஷ்யா - குரேஷியா அணிகள் இடையே நாளை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என டால்ஃபின்களை வைத்து கணிப்பு நடத்தப்பட்டது. இரண்டு அணிகளின் கொடிகள் பொருத்தப்பட்ட வட்டுகள் நீச்சல் குளத்தில் வீசப்பட்டன. அந்த வட்டுகளை எடுத்து வருவதற்கான பயிற்சிகள் 2 டால்ஃபின்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தன.
முதலில் வரும் டால்ஃபின் எந்த அணியின் கொடியைக் கொண்ட வட்டை எடுத்து வருகிறதோ, அந்த அணி வெற்றி பெறும் என முடிவு செய்யப்பட்டது. 4 முறை நடத்தப்பட்ட கணிப்பில் ரஷ்யாவுக்கு சாதகமாக 3 முறையும் குரோஷியாவுக்கு சாதகமாக ஒரு முறையும் முடிவுகள் வந்தன. டால்ஃபின்களின் இந்த ஆருடம் பலிக்குமா என்பது நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டிக்குப் பிறகே தெரியவரும்.