ஒரே ஓவரில் 77 ரன்கள் என்பது போல், வரலாற்றில் இந்திய வீரர்கள் நிகழ்த்திய மேஜிக் மொமண்ட்ஸ் என்பது, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பொதுமான ஒரு ஸ்பெசல் மொமண்ட்ஸ் ஆகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் யுவராஜ் சிங் அடித்த 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் மட்டுமன்றி 12 பந்துகளுக்கு அரைசதம், சுரேஷ் ரெய்னாவின் முதல் டி20 சதம், இர்ஃபான் பதானின் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள், சச்சினின் 200 ரன்கள், ரோகித் சர்மாவின் 264 ரன்கள், உலகக்கோப்பையில் சச்சின் மற்றும் ரோகித் சர்மாவின் 5 சதங்கள், மகேந்திர சிங் தோனியின் 2011 உலகக்கோப்பை வெற்றிக்கான சிக்சர் தொடர்ந்து தற்போது 2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் ஹரிஸ் ராஃபிற்கு எதிராக விராட் கோலி அடித்த 140+ வேகத்தில் குட் லெந்தில் வீசப்பட்ட பந்தை ஸ்டிரைட் சிக்சர் அடித்தது வரை பல மேஜிக் மொமண்ட்ஸ் இந்திய ரசிகர்களின் மனதில் இருந்து என்றும் நீங்காமல் இருக்கிறது.
ரவி சாஸ்திரி என்ன உலக சாதனை படைத்துள்ளார்?
மேற்கூறிய இந்திய வீரர்களின் பல மேஜிக் மொமண்ட்ஸ்களுக்கு முன்னதாக இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நிகழ்த்திய மேஜிக் பற்றி பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்காது. அப்படி என்ன ரவி சாஸ்திரி உலக சாதனை படைத்தார்.
1985 ஆம் ஆண்டில் பரோடா மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய ரவி சாஸ்திரி முந்தைய போட்டியில் சதமடித்திருந்தாலும் அவருடைய ஸ்லோ இன்னிங்ஸ்க்காக அனைவரது விமர்சனத்திற்க்கும் ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் தொடங்கப்பட்ட இரண்டாவது போட்டியில் களமிறங்கிய அவர், 42 பந்துகளில் அரைசதமடிக்க அவரது 100 ரன்கள் 80 பந்துகளிலேயே வந்தது. அதற்கிடையில் அவர் படைத்த மேஜிக் நாக் அப்போது டெக்னாலஜி டெவலப் இல்லாததால் அறியப்படாமலயே போனது.
இடது கை ஸ்பின்னரான திலக் ராஜை எதிர்கொண்ட ரவி சாஸ்திரி, முதல் பந்தை இறங்கிவந்து ஸ்டிரைட்டில் அடிக்க சிக்சருக்கு பறந்தது. அடுத்த 2 பந்துகளை ஒய்டு லாங்-ஆனில் சிக்சருக்கு பறக்கவிட, நான்காவது பந்தை ஓவர் மிட்-விக்கெட்டில் தூக்கி சிக்சருக்கு அனுப்பினார். ஐந்தாவது பந்தை லாங்-ஆனில் சிக்சருக்கு பறக்கவிட, கடைசி பந்தில் என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தவர்களின் கண்களுக்கு ஒரு மேஜிக்கை செய்து காட்டினார் ரவி சாஸ்திரி. 6ஆவது பந்தை பவுலரின் தலைக்கு மேல் அடித்த ரவி சாஸ்திரி அந்த பந்தையும் சிக்சருக்கு அனுப்ப சாத்தியமில்லாதது என்று எண்ணிய 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடித்து மிரட்டினார் இந்திய ஆல்ரவுண்டர்.
ருதுராஜ் 7 பந்துகளில் 7 சிக்சர்கள்
விஜய் ஹசாரே கோப்பைத்தொடரின் காலிறுதி போட்டியில் உத்திர பிரதேசத்திற்கு எதிராக, இடது கை ஸ்பின்னரான சிவா சிங் வீசிய 49ஆவது ஓவரில் சந்தித்தார் ருதுராஜ். சந்தித்த 7 பந்துகளில் 7 சிக்சர்களை பறக்கவிட, வரலாற்றில் இதுவரை எந்த ஒரு பேட்ஸ்மேனும் செய்யாத உலக சாதனையை படைத்து அசத்தினார் இந்திய இளம் பேட்ஸ்மேனான ருதுராஜ் ஹெய்க்வாட். 220 ரன்களை விளாசிய அவர், ரோகித் சர்மாவின் ஒரு இன்னிங்ஸில் 16 சிக்சர்கள் என்ற சாதனையும் சமன் செய்தார்.
டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்
இதுவரை எந்த ஒரு பவுலராலும் முறியடிக்கப்பட முடியாததாகவும், இனிவரும் பந்துவீச்சாளர்களாலும் முறியடிக்கப்பட கடினமானதாகவும் இருக்கப்போகும் ஒரு சாதனை என்றால், அது இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், பாகிஸ்தான் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரில், ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை தான் இருக்கும்.
வீசிய முதல் ஓவரில் 4ஆவது பந்தில் ஓபனர் சல்மான் பட் ஸ்லிப் கேட்ச், அடுத்து இறங்கிய யுனிஸ் கானை லெக்-பை விக்கெட் மற்றும் 3ஆவதாக இறங்கிய முகமது யுனிஸை பவுல்டாக்கியும் ஹாட்டிரிக் விக்கெட்டை வீழ்த்துவார் இர்ஃபான் பதான். ஒரு ஓவர் முடிவில் 0-3 என்று இருக்கும் பாகிஸ்தான் அணி. இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீசிய பவுலராக மாறினார் இர்ஃபான் பதான்.
ரிக்கி பாண்டிங்-கில் கிறிஸ்ட்-ஷான் வார்னே : இந்திய வீரரின் முதல் ஹாட்டிரிக்
இந்திய அணியின் முதல் ஹாட் டிரிக், இந்த மூன்று பேரை வீழ்த்தி தான் கிடைக்கும். அந்த சாதனையை நிகழ்த்தியவர் முன்னாள் ஜாம்பவான் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங். 2001ல் கல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தி காட்டினார். மொத்தம் இதுவரை 3 இந்திய பவுலர்கள் டெஸ்ட் போட்டியில் ஹாட் டிரிக் எடுத்து அசத்தியுள்ளனர். 2019ல் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ஹாட்டிரிக் எடுத்து அசத்தியுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.
ஒரே ஓவரில் 77 ரன்கள் அடித்த வரலாறு
1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று, லான்காஸ்டர் பார்க்கில் கேன்டர்பரிக்கு எதிராக வெலிங்டனுக்காக ”பெர்ட் வான்ஸ்” ஒரே ஓவரில் 77 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த போட்டியில் கேன்டர்பரி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவரில் 95 ரன்கள் எடுப்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அந்த நிலையில், கேண்டர்பரிக்கு எளிதாக ரன்களை விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு வெலிங்டன் பயிற்சியாளர் மற்றும் விக்கெட் கீப்பர் இருவரும் வந்ததாக கூறப்படுகிறது.
ஏன் என்றால் அந்த போட்டியில் வெலிங்க்டன் வென்றாலும் அது அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் இடத்தில் இல்லை. ஆனால் இந்த போட்டியில் கேண்டர்பரி வெற்றி பெற்றால் அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி செல்லும் வாய்ப்பு இருந்தது.
இதனால் அதிகம் ரன்களை விட்டுக்கொடுக்கும் பவுலரான வான்ஸை பந்துவீச அனுமதித்தனர். அதன்பிறகு தொடங்கிய கேளிக்கூத்தில் வான்ஸ் வீசிய முதல் பந்தையே நோ பாலாக வீசினார், அதற்கு பிறகு முதல் பந்தை வீசினார், ஆனால் 2ஆவது பந்தை வீச அவர் 15 முறை நோ-பாலாக வீச அதை எதிர்கொண்ட கெர்மன் பந்தை கிரவுண்டிற்கு வெளியே அடித்தார். 2 பந்துகளிலேயே 72 ரன்களை எடுத்தது கேண்டர்பரி அணி. அடுத்த 4 பந்துகளுக்கு 5 ரன்களை விட்டுக்கொடுத்தார் வான்ஸ். எளிதாக போட்டியை வெற்றிபெற்ற கேண்டர்பரி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மட்டுமில்லாமல், அந்த தொடருக்கான கோப்பையையும் தட்டிச்சென்றது.
இந்த அக்கப்போரில் குழம்பிப்போன அம்பயர்
இந்த சாதனையில் மேலும் வியக்க வைக்க்கும் கேளிக்கூத்தான விசயம் என்னவென்றால், குழப்பமடைந்த நடுவர் தவறாக எண்ணி ஐந்து பந்துகளுக்குப் பிறகே ஓவர் முடிந்ததாக அழைப்பு விடுத்தார்.