உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த ஆப்ரிக்க அணி என்ற சாதனையை மொராக்கோ அணி படைத்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக புதிய சாதனையை படைத்துள்ளது மொராக்கோ. ஆப்ரிக்க நாடான மொராக்கோ, காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்ததன் மூலம் இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளது.
இஸ்லாமிய நாடான மொராக்கோ அணியின் வெற்றியை ஐரோப்பிய நாடுகளின் வெற்றியாகத்தான் கருதவேண்டும். இதற்கான காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. ஐரோப்பிய மண்ணில் பிறந்து அங்கேயே கால்பந்து பயின்று பின்னர், மொராக்கோ அணியில் இணைந்து விளையாடி வருகின்றனர். இது கால்பந்து விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
இதில், கோல் கீப்பர் உள்ளிட்ட நட்சத்திர ஆட்டக்காரர்கள் அனைவரும் மொராக்கோவுக்கு வெளியே பிறந்தவர்கள். அதில், யாசின் பௌனவ் கனடாவிலும், முனீர் முகமதி மற்றும் அக்ரஃப் ஹக்கிமி ஆகியோர் ஸ்பெயினிலும் நௌசைர் மஸ்ரௌய், சோபியான் அம்ரபத், ஹக்கீம் ஜியேச், ஜகாரியா அபுகல் ஆகியோர் நெதர்லாந்திலும் பிறந்தவர்கள். அதேபோல் ரோமன்சைஸ், சோபியான் பௌஃபல் ஆகியோர் பிரான்சிலும், இல்லியாஸ் சேர், செலிம் அமல்லா, பிலால் எல் கன்னூஸ், அனஸ் ஸரோரி ஆகியோர் பெல்ஜியத்திலும் வாலிட் செத்திரா இத்தாலியிலும் பிறந்துள்ளனர். வௌ;வேறு நாடுகளில் பிறந்த இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளனர்.
திறமை எங்கிருந்தாலும் அதை நமது நாட்டின் வெற்றிக்கு பயன்படுத்த வேண்டும். அதைத்தான் மொராக்கோ செய்துள்ளது. இது மற்ற நாடுகளுக்கு பாடமாக அமைந்துள்ளது.