உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் பட்டம் வென்றுள்ளார்.
டென்னிஸ் தரநிலையில் டாப் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்ற உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைப்பெற்றது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு நிகரகாக கருதப்படும் இந்தப்போட்டி ஒவ்வொரு வருடமும் ஆண்டின் இறுதியில் நடைபெறும். இதில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின், பல்கேரியாவின் டிமிட்ரோவ் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 7-5 என முதல் செட்டை கைப்பற்றிய கிரிகோர் டிமிட்ரோவ் இரண்டாவது செட்டை 4-6 என இழந்தார். பின்னர் எழுச்சி பெற்ற டிமிட்ரோவ், வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இதன் மூலம் தரவரிசையில் 8 பேர் பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக கிரிகோர் டிமிட்ரோவ் பட்டம் வென்றுள்ளார்.