விளையாட்டு

"என் அணிக்கு நிரந்தர கேப்டன் தோனிதான்" - டிவில்லியர்ஸ் !

"என் அணிக்கு நிரந்தர கேப்டன் தோனிதான்" - டிவில்லியர்ஸ் !

jagadeesh

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் நிரந்தர ஐபிஎல் லெவன் அணியைத் தேர்வு செய்து அதற்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனியை நியமித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற டிவில்லயர்ஸ் நிரந்தர ஐபிஎல் 11 அணியைத் தேர்வு செய்ய ஒப்புக்கொண்டார். 11 வீரர்களில் கட்டாயம் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற வேண்டும் எனவும் அதில் டிவில்லயர்ஸின் பெயரும் இருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கும், ரோஹித் சர்மாவும் தொடக்க வீரர்களாகத் தேர்வு செய்தார்.

இதற்கு அடுத்தபடியாக அணியின் மூன்றாம் வீரராக பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியின் கேப்டனான விராட் கோலியை தேர்வு செய்தார். பின்பு நான்காம் இடத்திற்கு மொத்தம் மூன்று வீரர்களை டிவில்லியர்ஸ் தேர்வு செய்தார். கேன் வில்லயம்சன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிவில்லயர்ஸ். இதில் யாராவது ஒருவரை நான்காம் இடத்தில் களமிறக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது அணியின் கேப்டனாக தோனியை தேர்வு செய்து 5 ஆவது பேட்ஸ்மேனாக நியமித்தார்.

பின்பு அடுத்தடுத்த இடங்களில் ரவிந்திர ஜடேஜா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், ரபாடா மற்றும் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பின்பு தோனியை கேப்டனாக்கியதை குறித்து பேசிய டிவில்லியர்ஸ் "என்னுடைய 11 பேர் கொண்ட கிரிக்கெட் அணிக்கு தோனிதான் எப்போதும் நிரந்தர கேப்டன்" எனத் தெரிவித்துள்ளார்.