ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியில் ரிஷாப் பன்ட் 38 ரன்களும், விஜய் ஷங்கர், ஹர்சல் படேல் தலா 36 ரன்களும் எடுத்தனர். 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர் அம்பத்தி ராயுடு மட்டும் அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளி யில் விக்கெட்களை பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்விய டைந்தது.
(இது முதல்ல...)
சென்னை அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்திருந்த நிலையில், 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி ஆறுதல் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் வீழ்த்தியபோது கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர், கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷியும் சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்காவும். அதே போல சிஎஸ்கே பேட்டிங் செய்த போது, ராயுடு பந்தை சிக்சருக்கு அடித்ததும் மகிழ்ச்சிப் பொங்க ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர். ராயுடுவுக்குப் பின் சாம் பில்லிங்ஸ், ரெய்னா, தோனி என ஒவ்வொருவராக விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, சோகமானார்கள் இருவரும்.
பிறகு, போட்டியில இதெல்லாம் சகஜமப்பா என்ற நினைத்தபடியே சென்றனர்.