தோனி தனது கையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி நடந்தபோது, விக்கெட் கீப்பர் தோனி, பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, தோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுறுத்தியது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் தோனி தனது கையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கியுள்ளார். இன்றைய போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சின் போது களமிறங்கியுள்ள தோனி தனது விக்கட் கீப்பிங் கையுறையில் ‘பாலிதான்’ சின்னத்தை நீக்கியுள்ளார்.
முன்னதாக தோனிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, தோனி தனது கையுறையில் உள்ள அந்த முத்திரையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. அதனால் இன்றைய போட்டியில் தோனி, வேறு கையுறையை பயன்படுத்தி விளையாடுவார் எனவும் கூறப்பட்டது.